பல்கலைக்கழக மாணவிகள் சரியாக பர்தா அணியாததால் விரட்டடியடிப்பு....

  
 

பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்து வருகிறது.
 
அத்துடன்  பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தடை விதித்தமையால்   சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவிகளை தலிபான்கள் தாக்கும் வீடியோ வெளியாகி அனைவரையும் பரபரப்பாக்கியுள்ளது.
 
 வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள படாசவுன் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு மாணவிகள் பலர் காத்து இருக்கிறார்கள். அவர்களை பல்கலைக்கழகத்துக்குள் நுழைய விடாமல் தாலிபான்கள் தடுத்து நிறுத்தி  பின்னர்  மாணவிகளை தாக்கி விரட்டியடிக்கிறார். இதனால் மாணவிகள் அங்கிருந்து ஓடுகிறார்கள்.
 
 பர்தா அணியாததால் பல்கலைக் கழகத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது .   ஆனால் மாணவிகள் அனைவரும் சரியாக பர்தா அணிந்து இருந்தனர். ஆனாலும் அவர்களை வகுப்புக்கு செல்ல விடாமல் தடுத்து விரட்டியடித்துள்ளனர். மாணவிகளை தாக்கிய அதிகாரி தாலிபான் அரசாங்கத்தின் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகத்தின் அதிகாரி என்பது தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

SHARE THIS

Facebook Comment