இலங்கை யுத்தத்திற்கு ஆயுதம் வழங்கிய பாகிஸ்தான் தனியார் நிறுவனம்.....

 

 
இலங்கையில் இடம்பெற்ற விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவம் வெற்றி பெறுவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்கியது எமது நிறுவன ஆயுதங்களே  என பாகிஸ்தானை சேர்ந்த   ஆயுத உற்பத்தியாளர்  தெரிவித்துள்ளதாக  டோவ்ன் செய்தி வெளியிட்டுள்ளது.
 
பாக்கிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்துகொண்ட தனியார் ஆயுத உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது  “தனது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மிகவும் சிறப்பானவை, பயனுள்ளவை அவை யுத்தத்தின் போக்கை தீர்மானிக்கின்றன. அதுமட்டுமன்றி எமது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட  கிரனைட் லோஞ்சர்கள் இலங்கை விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொள்வதற்கு உதவின என தெரிவித்துள்ளார்.” 
 
அத்துடன் “எங்கள் இராணுவ தளபதி எங்கள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியை அழைத்து இதற்காக நன்றி தெரிவித்துள்ளார்.  தனது நிறுவனத்தின் 30 வீதமான வருமானம் ஏற்றுமதி மூலம் பெறப்படுவதாக டோவ்ட்சன் ஆர்மரி நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் இர்பான் அகமட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE THIS

Facebook Comment