வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 05 கைதிகள் தப்பிப்பு.....
22 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட 05 கைதிகள் நேற்று (15) மாலை தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். இவ்வாறு தப்பிச் சென்றுள்ள கைதிகளை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

 இதேவேளை, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மையின் பின்னர் தப்பிச்சென்ற 07 கைதிகளை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 225 கைதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

SHARE THIS

Facebook Comment