பொருட்களுக்கான விலைகுறைப்பை வியாபாரிகள் பொது மக்களுக்கு பொடுப்பதில்லை.....

 
 

பொருட்களுக்கான விலை குறைப்பின் பயனை மக்களுக்கு துரிதமாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 
 
 இந்த பயனை பெரும்பாலான வியாபாரிகள் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதில்லை என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
 
 அதற்கமைய, பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட உணவு விநியோக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, அதற்கான தீர்வுகளை வழங்கவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE THIS

Facebook Comment