தளபதி விஜய்க்கு வில்லன் விஷாலா?

 
 
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். 
 
இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதில் நடிகர் அர்ஜுன், ஹிந்தி நடிகர் சஞ்சய்தத், இயக்குனர் கௌதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள்  வெளியாகியுள்ள நிலையில்  இப்படத்தில் வில்லனாக விஷாலை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
 இதற்காக விஷாலை லோகேஷ் கனகராஜ் நேரில் சந்தித்து பேசி கதையும் சொல்லி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைதி பட பாணியில் கேங்ஸ்டர் படமாக இப்படம் தயாராக உள்ளதாக சினிமா வட்டாரங்கள் முணுமுணுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.SHARE THIS

Facebook Comment