இரண்டு வார காலத்திற்குள் அரசியலமைப்பு சபை ஸ்தாபிக்கப்படும் - அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ

 

 
எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் அரசியலமைப்பு சபை ஸ்தாபிக்கப்படுமென நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சபாநாயகர் பங்கேற்புடன் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார். 
 
 அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் சபாநாயகர் நேற்று முன்தினம் (31) கையொப்பம் இட்டதோடு, அது சட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளததோடு அரசியலமைப்பு சபை 10 உறுப்பினர்களை கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.
 
 இதனிடையே, 21ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டதுடன், நீதிச் சேவை ஆணைக்குழு தவிர்ந்த ஏனைய ஆணைக்குழுக்கள் பதில் நிலையில் செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சபை ஸ்தாபிக்கபட்டதும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE THIS

Facebook Comment