மேலும் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 51 பேர் கைது...

நாளுக்கு நாள் நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்ல முற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் இன்று அதிகாலை திருகோணமலை கடற்பரப்பில் 51 பேரை கடற்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.  
 
 

 
 
சட்டவிரோத மனித கடத்தல்களை கட்டுப்படுத்தவதற்காக தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்தநிலையில்  இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது நீண்ட படகொன்றுடன் குறித்த 51 பேரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைதானாவர்களில் 5 சிறுவர்களும 5 பெண்களும் அடங்குகின்றனர். யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா மற்றும் இரத்தினப்புரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 முதல் 56 வயதுக்கு இடைப்பட்ட 51 பேர் இவ்வாறு கைதாகியுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Asian Tamil Network News