கிளிநொச்சி முகமாலையில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் படுகாயம்....

 

 
 
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் “ஹலோ ட்ரஸ்ட்” ஊழியர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் குறித்த நபர் நேற்று (22) மதியம் உணவு அருந்திவிட்டு கை கழுவும் போது நிலத்தில் பொருள் ஒன்று இருப்பதை அவதானித்து  அதனை எடுத்து நிலத்தில் குற்றிப் பார்த்தபோது வெடித்து சிதறியுள்ளது. இதன்போது குறித்த நபரின் கை சிதறி படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About Asian Tamil Network News