கிளிநொச்சியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் பீப்பாய்கள் மீட்பு...

 

 
 
கிளிநொச்சி - நவபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருதொகை எரிபொருள் காவல்துறையினால் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த தொகை எரிபொருள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
 
 
 இதற்கமைய, சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 லீற்றர் பெற்றோல், 6,400 லீற்றர் டீசல் மற்றும் 25 லீற்றர் மண்ணெண்ணெய் அடங்கிய 35 பீப்பாய்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கத.
 

About Asian Tamil Network News