வடகொரியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று - நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்....!

 
 
 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 90 இலட்சத்து மூவாயிரத்து 755 ஆக அதிகரித்துள்ளது.   ஒரு சில நாடுகளில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்படுத்தவில்லை. வடகொரியாவில் கொரோனா தொற்று ஏற்படவேயில்லை என அரசு தொடர்ந்து கூறி வந்த நிலையில், அந்நாட்டில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனினும் அந்  நபர் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை. 
 
 இதனை தொடர்ந்து கொரோனாவை ஒழிப்போம் என உறுதி பூண்டுள்ள வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் தேசிய அளவில் அவசரகால நிலை மற்றும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு  பிறப்பித்து உள்ளமை உலக நாடுகளை அவதானிக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
Worldwide, the number of people infected with the corona virus has increased from 51 crore to 90 lakh three thousand 755. In a few countries the corona did not cause a major outbreak. While the government has repeatedly said there is no corona infection in North Korea, it has been confirmed for the first time in the country that a person has been infected with corona. However details about that person have not been released.
 
 It is noteworthy that North Korean President Kim Jong Un, who has vowed to eliminate the corona following this, has issued a state of emergency nationwide and issued a nationwide curfew order to keep the world at bay.

About Asian Tamil Network News