உக்ரைனை முழுவதுமாக கைப்பற்ற ரஷ்யா உக்ரைன் மீது நீண்ட யுத்தத்தை நடாத்த தீர்மானம் - அமெரிக்க உளவுப்பிரிவு

 

 
 
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான யுத்தத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு  தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 
 
 உக்ரைன் மீது மிக நீண்ட யுத்தத்தை நடத்துவதற்கான முயற்சிகளை ரஷ்ய ஜனாதிபதி மேற்கொண்டு வருவதாகவும் குறித்த நெருக்கடியைத் தீர்வின்றி தொடர்வதற்கு முயற்சிப்பதாகவும் அமெரிக்க உளவுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ச்சியான தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் ரஷ்யா, உக்ரைனை முழுவதுமாக கைப்பற்றும் நிலைப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
 
 உக்ரைனின் தலைநகரில் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டதன் பின்னர் மீண்டும் டொன்பாஸ் பிராந்தியம் தொடர்பில் மொஸ்கோ கரிசனை கொண்டுள்ளதாகவும் சர்வதேச அரசியல் அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பணவீக்கம், உணவுப் பற்றாக்குறை, எரிசக்தி விலையதிகரிப்பு காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு உக்ரைனுக்கு குறைவடையலாம் என ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புட்டின்  எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க உளவுப் பிரிவின் தலைமை அதிகாரி அவ்ரில் ஹைனெஸ் (Avril Haines) கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
 
 
 
 
US intelligence says Russian President Vladimir Putin is preparing to take the war on Ukraine to the next level.
 
 US intelligence has said the Russian president is trying to wage a protracted war on Ukraine and will continue to work to resolve the crisis. Russia is reportedly in the process of occupying the whole of Ukraine, with a series of attacks in eastern Ukraine.
 
 International political observers say Moscow is once again concerned about the Donbass region following a series of attacks on the Ukrainian capital. Russian intelligence chief Avril Haines has said that Russian President Vladimir Putin expects US and EU support for Ukraine to decline due to inflation, food shortages and rising energy prices.

About Asian Tamil Network News