இலங்கை நாட்டின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து..!

 

 
 
 
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படும் வன்முறையை தொடர்ந்து இலங்கையில் அரச எதிர்ப்பு போராட்டக்காரர்களால் (அடிப்படைவாதக்குழு) ஏற்படுத்தப்பட்ட    கலவரத்தையடுத்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது பதவியை இராஜினாமா செய்தார்... 
 
அதனைத்தொடர்ந்து பிரதமர் பதவிக்கு பலரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (12) மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.  

இதற்கு பலர் தமது  எதிர்ப்பை தெரிவித்திருந்த போதிலும் இலங்கை ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது டுவிட்டர் பக்கத்தில் தற்போதைய இலங்கை பிரதமருக்கு வாழ்த்துச்செய்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 

 

 

அதுமட்டுமன்றி இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் தனது வாழ்த்துச்செய்தியை புதிய பிரதமருக்கு டுவிட்டர் பதிவினூடாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

 Former Prime Minister Mahinda Rajapaksa has resigned following a series of violent riots by anti-government protesters (fundamentalist groups) in Sri Lanka, including the destruction of public property and the suffering of civilians, following reports of violence by supporters of former Prime Minister Mahinda Rajapaksa.
 
Following this, United National Party leader Ranil Wickremesinghe was sworn in as the Prime Minister this evening (12) at the Presidential Palace in Fort in the presence of President Gotabhaya Rajapaksa.

It is noteworthy that former Prime Minister Mahinda Rajapaksa has congratulated the current Prime Minister of Sri Lanka on his Twitter page, despite the opposition of many.

 

 

About ஆசிய தமிழ் செய்திகள்