அண்மைய செய்திகள்
உள்நாட்டு பால்மா விலை அதிகரிப்பு.....

உள்நாட்டு பால்மா விலை அதிகரிப்பு.....

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மா விலைகளை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 அதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்றில் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 950 ரூபாவாகும். அத்துடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முழு ஆடைப் பால்மா கிலோவொன்றில் விலை 230 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 2,350 ரூபாவாகும் அவ்வாறே, ஆடை நீக்கப்பட்ட பால்மாவின் விலை 210 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டவுள்ளது. அதன் புதிய 1050 விலை ரூபா என உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள தகவல் குறிப்பிடத்தக்கது.
விடுதியில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவன் மாயம்.....

விடுதியில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவன் மாயம்.....

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மூன்றாம் வருட மாணவர் ஒருவர்  நேற்று (03) காலை முதல் குறித்த மாணவர் காணாமல் போயுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த 25 வயதான புலஸ்தி பிரமுதித் பெரேரா என்ற மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

 பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த குறித்த மாணவனை கடந்த 02 ஆம் திகதி இறுதியாக கண்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதிகரித்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் ......

அதிகரித்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் ......

ஈரானில் ஒரு வாரத்துக்கு மேலாக அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அந்த நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
  
 போராட்டங்களை தீர்மானமாக கையாள்வதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். ஈரானின் 31 மாகாணங்களில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. கடந்த 16ஆம் திகதி முறையற்ற விதத்தில் ஹிஜாப் அணிந்த குற்றச்சாட்டில் 22 வயதான பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தமையை அடுத்து ஈரானில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
 
 
 
 இதன்போது ஏற்பட்ட அமைதியின்மை சம்பவங்களில் இதுவரையில் 35 பேர் பலியாகினர். பல நகரங்களில் மோதல்கள் தொடர்கின்றன. குறித்த பெண் ஹிஜாப் விதிகளுக்கு புறம்பாக செயற்பட்டமையால் அவரது தலையில் தாக்கப்பட்டதாகவும் காவல்துறையினரின் வாகனத்தின் மீது தலையை அடித்ததாகவும் கூறப்படுகிறது.
 
 
 
 எனினும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரான் காவல்துறையினர், குறித்த பெண்ணுக்கு திடீர் இதய செயலிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் அவரது மரணம் தொடர்பில் விசாரிக்கப்படும் என ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.
சோசலிச இளைஞர் அமைப்பின் போராட்ட பேரணிக்கு பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்...

சோசலிச இளைஞர் அமைப்பின் போராட்ட பேரணிக்கு பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்...

அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சோசலிச இளைஞர் அமைப்பு நேற்றையதினம் (24) ஏற்பாடு செய்திருந்த '' புதிய சக்தி – இளைஞர் சக்தி மீண்டும் கொழும்பிற்கு' என்ற தொனிப்பொருளில் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்ட பேரணியை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது, 4 பெண்கள், இரண்டு தேரர்கள் உட்பட 84 பேரை தமது பொறுப்பில் எடுத்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளரார்.
 

 
இந்நிலையில், குறித்த பகுதிக்கு வருகை தந்த பொலிஸார் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்தனர்.
 
 இந்நிலையில், சுகாதார அமைச்சு அமைந்துள்ள பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.   இதன்போது சோசலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர உட்பட ஒரு தொகுதி போராட்டக்காரர்களை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்தனர். 
 
  இதேவேளை, காயமடைந்த சிலர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
படகு கவிழ்ந்ததில் 70 ற்கு மேற்பட்ட ஏதிலிகள் உயிரிழப்பு

படகு கவிழ்ந்ததில் 70 ற்கு மேற்பட்ட ஏதிலிகள் உயிரிழப்பு

சிரியாவின் ஆர்வட் (Arwad) தீவுக்கு அருகில் உள்ள கடற்பிராந்தியத்தில் ஏதிலிகள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 77 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

 
விபத்து இடம்பெற்ற தருணத்தில் லெபனான், சிரியா மற்றும் பலஸ்தீன நாடுகளைச் சேர்ந்த 120 பேர் படகில் பயணித்துள்ளனர். அனர்த்தம் இடம்பெற்றதை அடுத்து 20 ற்கும் மேற்பட்டவர்கள் காப்பாற்றப்பட்டு சிரியாவின் டாடாஸ் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற காவல்துறையினர்....

ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற காவல்துறையினர்....

 
 

 
ஈரானில் கடந்த 13ஆம் திகதி குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் தனது குடும்பத்துடன் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்ற வேளை ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் காவல்துறை பிரிவு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
 
 தெஹ்ரான் செல்லும் வழியில் மாஷா அமினி மற்றும் அவர்களது குடும்பத்தினரை நெறிமுறை அமுல்படுத்தும் காவல்துறையினர் இடைமறித்து மாஷா அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி அவரை  கைது செய்து கடுமையாக தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாக்கியதில் படுகாயமடைந்த மாஷா காவல்துறை நிலையத்தில் இருந்து நோயாளி காவு வண்டி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாஷா அமினி கடந்த 17ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
 இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன்  மாஷா மாரடைப்பு காரணமாக தான் உயிரிழந்ததாக ஈரான் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி காவல்துறை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாஷா அமினிக்கு ஆதரவாக ஈரானின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. பெருகிவரும் போராட்டங்களில் இதுவரை எட்டு பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி பைடன், ஈரான் போராட்டக்காரர்களுக்கு வணக்கம் தெரிவித்ததோடு அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க உள்ளதாகவும் கூறியுளள்ார்.
 
 அவர் மேலும் தெரிவிக்கையில், “ஈரானின் துணிச்சலான குடிமக்கள் இப்போது தங்கள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க போராடுகிறார்கள். ஈரானின் துணிச்சலான பெண்களுடன் அமெரிக்கா துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.”
 
 கார்த்திகை  2019ற்கு பின் ஈரானில் ஏற்பட்டுள்ள மிகவும் தீவிரமான போராட்டங்களில் இதுவும் ஒன்றாகும். அமினியின் சொந்த மாகாணமான குர்திஸ்தானில் வெள்ளிக்கிழமை முதல் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. குறிப்பாக வடக்கு ஈரானில், தொடர்ந்து ஐந்தாவது நாளாக புதன்கிழமையும், பல நகரங்களில் போராட்டங்கள் நடக்கின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியும் காவல்துறை வாகனங்கள் மற்றும் குப்பைத் தொட்டிகளுக்கு தீ மூட்டியும் அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்னர்.. இக்கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதோடு பலரை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 8 போராட்டக்காரர்கள் கலவரத்தின் போது கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 450 பேர் காயமடைந்துள்ளதாகவும்   500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ள வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூரியின் உணவகத்தை சுற்றிவளைத்த வணிகவரித்துறை ...

நடிகர் சூரியின் உணவகத்தை சுற்றிவளைத்த வணிகவரித்துறை ...

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் சூரி.இவர் மதுரையில் அம்மன் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார்.


 இந்த உணவங்கள் மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் அம்மன் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்நிலையில் மதுரையில் உள்ள நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில் வணிகவரித்துறை சோதனை நடத்தியுள்ளனர்.

 ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணத்தை வசூலிப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் சோதனை நடந்துள்ளது. மேலும் உணவகத்துக்கு மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லாதது பற்றியும் விசாரணை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 அம்மன் உணவகத்தின் மீதான புகார் தொடர்பாக 15 நாளில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நடிகர் சூரிக்கு வணிகவரித்துறை உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை யாரும் பார்க்காத எலிசபெத்  ராணியின் புகைப்படம்....

இதுவரை யாரும் பார்க்காத எலிசபெத் ராணியின் புகைப்படம்....

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் திகதி மரணம் அடைந்தார். மறுநாளில் நாட்டின் மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டார். ராணியின் மறைவால் அரச முறை துக்கம் கடைப்பிடிப்பது பற்றி பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கை வெளியிட்டது.


 அந்த அறிக்கையில், "மாட்சிமை தங்கிய ராணியின் மறைவையடுத்து, அவரது இறுதிச்சடங்குக்கு பின்னர் மேலும் ஒரு வாரம் அரச துக்கம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது மன்னர் விருப்பம். அரச துக்கம், அரச குடும்பத்தினரால், பணியாளர்களால், படையினரால் கடைபிடிக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.


 இதையொட்டி அரச குடும்பத்தினர் எந்தவொரு அதிகாரபூர்வ நிகழ்ச்சியிலும் இன்னும் ஒரு வாரம் பங்கேற்க மாட்டார்கள். இதுவரை வெளியிடப்படாத ராணி எலிசபெத்தின் புகைப்படம் ஒன்றையும் அரச குடும்பம் வெளியிட்டுள்ளது. இந்தப்படம் 1971-ம் ஆண்டு ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் எடுக்கப்பட்டதாகும். 

இந்தப்படத்தை அரச குடும்பம், "உங்கள் துயிலுக்காய் பறக்கும் தேவதைகள் பாடட்டும், மாட்சிமை தங்கிய ராணியின் நினைவாக" என்ற வார்த்தைகளுடன் வெளியிட்டுள்ளது. "உங்கள் துயிலுக்காய் பறக்கும் தேவதைகள் பாடட்டும்" என்ற வரிகள், ஷேக்ஸ்பியரின் 'ஹேம்லட்' நாடகத்தில் வரக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ள 300 அரச ஊழியர்கள்...

தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ள 300 அரச ஊழியர்கள்...
அரசாங்கத்தினால் வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய, சுமார் 300 அரச ஊழியர்கள் வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.  

 சில அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு உட்பட்டவர்களே வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

 அரசாங்கத்தினால் அண்மையில் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் அரச ஊழியர்களுக்கு 05 வருடங்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
700ற்கு மேற்பட்டோர் இலங்கையிலிருந்து கொரியாவிற்கு தொழில் நிமித்தம் பயணம்...

700ற்கு மேற்பட்டோர் இலங்கையிலிருந்து கொரியாவிற்கு தொழில் நிமித்தம் பயணம்...

கொரியாவிற்கு தொழில் நிமித்தம் அடுத்த மாதம் மேலும் 750 பேரை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 கொரியன் மொழியில் தேர்ச்சி பெற்றவர்களை அந்நாட்டிற்கு தொழிலுக்காக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் சேனாரத்ன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.


வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,100 பேர் தொழில் நிமித்தம் கொரியாவிற்கு சென்றுள்ளனர்.

 தொழிற்சாலைகள், கட்டட நிர்மாணப் பணிகள், கடற்றொழில் துறை உள்ளிட்ட துறைகளுக்காக இலங்கை பணியாளர்கள் அனுப்பப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ள அதேவேளை தொழில் நிமித்தம் இஸ்ரேலுக்கு செல்வதற்கு 500 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்ணுக்குள் கரைந்த நிலவு சீதா மகாலட்சுமியின் புதிய போட்டோ ஷீட்.....

கண்ணுக்குள் கரைந்த நிலவு சீதா மகாலட்சுமியின் புதிய போட்டோ ஷீட்.....
சீதா ராமம் படத்தில் சீதா மகாலட்சுமியாக தனது அழகினாலும் நடிப்பினாலும் அனைவரையும் கவர்ந்தவர் தான் நடிகை ம்ருனால் தாகூர்..
 


இவர் அடிக்கடி தனது புகைப்படங்களில் சமூக வலைதளங்களில் பகிர்வது வழக்கம். அதுபோல் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் முகநூல் பக்கங்களில் சில்வர் நிறத்திலான ஆடையணிந்த புகைப்படங்களை பெதிவிட்டுள்ளார். 
இப்புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
 

இந்தியாவில் கைதாகியிருக்கும் இளைஞர்களை விடுவிக்க நடவடிக்கை - கடற்றொழில் அமைச்சர்

இந்தியாவில் கைதாகியிருக்கும் இளைஞர்களை விடுவிக்க நடவடிக்கை - கடற்றொழில் அமைச்சர்

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து இளைஞர்களையும் விரைவில் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்த போது இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 69 தமிழ் இளைஞர்களின் உறவினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

 நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மீன்பிடித் தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாத காரணத்தினால் அவர்கள் இவ்வாறு வௌிநாடு செல்ல முயற்சித்ததாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 69 தமிழ் இளைஞர்களும் தற்போது பெங்களூர் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

 சட்டவிரோதமாக வேறு நாடுகளுக்கு செல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது எனவும்  நட்புறவை பயன்படுத்தி கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும்   அமைச்சர்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய பிடியிலிருந்த மீட்கப்பட்ட இலங்கையை சேர்ந்த மாணவர்கள்....

ரஷ்ய பிடியிலிருந்த மீட்கப்பட்ட இலங்கையை சேர்ந்த மாணவர்கள்....

உக்ரைனின் இசியும் நகரில் ரஷ்ய பிடியிலிருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் 07 இலங்கை மாணவர்களின் நிழற்படங்களை உக்ரைன் ஊடகவியலாளர் ஒருவர் தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். 20 – 40 வயதிற்கு இடைப்பட்ட    பெண்ணொருவரும் 6 ஆண்களும் அடங்குவதாக குறித்த ஊடகவியலாளர் பதிவிட்டுள்ளார். 

 உக்ரைனின் குப்யன்ஸ்க் பிரதேசத்திற்குச் சென்ற 3 வாரங்களில், குப்பியன்ஸிலிருந்து கார்கிவ் நோக்கி செல்ல முயன்ற போது இவர்கள் ரஷ்யர்களிடம் சிக்கியதாக குறித்த ஊடகவியலாளர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.. அதன் பின்னர் இந்த 07 மாணவர்களும் அடையாளம் தெரியாத பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் டுவிட்டர் பதிவில் பதிவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெளியானது பொன்னியின் செல்வன் பாகம் 1 ட்ரெய்லர்...

வெளியானது பொன்னியின் செல்வன் பாகம் 1 ட்ரெய்லர்...

‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்.
 

 
 கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
 
 இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலர் நடிக்கின்றனர். 
 
இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வெளிவர உள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 
 
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் டீசரும், ‘பொன்னி நதி பாக்கணுமே’ பாடலும், அதன்பின்னர் வெளியான ‘சோழா சோழா’ பாடலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகை சினேகாவின் புதிய அப்டேட்...

ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகை சினேகாவின் புதிய அப்டேட்...

தனது அழகான சிரிப்பால் ரசிகர்களை இன்றைக்கும் கவர்ந்து வைத்திருப்பவர் நடிகை சினேகா.

 

 

 தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து தென்னிந்தியாவையே ஆட்சி செய்து வந்தார். கமல், அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டு நடித்துள்ளார்.

 

புன்னகையரசியாக சினிமாவில் வலம் வந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 40 வயதாகும் சினேகா, இப்போதும் தகதகவென மின்னும் அழகில் உள்ளார்.

அந்த வகையில் தற்போது சினேகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து  இழுத்துள்ளது.